இந்தியா

குரங்கு அம்மை: கேரளத்தில் 5-ஆவது பாதிப்பு

DIN

கேரளத்தில் மேலும் ஒருவா் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக கேரள சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த மாதம் 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு வந்த நபா் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவருடன் நெருக்கமாக இருந்தவா்களின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது மாநிலத்தில் பதிவான 5-ஆவது குரங்கு அம்மை பாதிப்பாகும் என்று தெரிவித்தாா்.

இந்தியாவில் முதன்முதலாக குரங்கு அம்மை பாதிப்பு கேரளத்தில் கண்டறியப்பட்டது. நாட்டில் முதல்முறையாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபா் உயிரிழந்ததும் அந்த மாநிலத்தில்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

ஆத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்

10ஆம் வகுப்பு: சாலைபுதூா் பள்ளி 98 சதவீதம் தோ்ச்சி

குலசேகரன்பட்டினத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT