இந்தியா

நாட்டில் புதிதாக மேலும் 17,135 பேருக்கு தொற்று

DIN

நாட்டில் செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பு 13,734 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 17,135 ஆக அதிகரித்துள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 13,734 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 17,135 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,40,67,144-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,37,057 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.31 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 47 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,477 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 19,823 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,34,03,610-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.49 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,04,84,30,732கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மட்டும் 23,49,651 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT