இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2; மாநிலங்களவை பகல் 12 வரை ஒத்திவைப்பு

DIN

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் பகல் 12 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இன்றைய அலுவல்கள் காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் தொடங்கிய நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் யங் இந்தியா நிறுவனத்திற்கு சீல் வைத்தது குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை வைத்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர் மறுத்ததால், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

அதேபோல், மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT