இந்தியா

கோவா: மகளைக் கொன்றுவிட்டு ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீது வழக்குப் பதிவு

கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 18 வயது மகளைக் கொன்றுவிட்டு தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

DIN

கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 18 வயது மகளைக் கொன்றுவிட்டு தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: “ ஜெர்மனியில் சில ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நிமிஷா வல்சன் என்பவர் தனது மகளுடன் கோவாவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு கடந்த வாரம் வந்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 6) காலை 5 மணிக்கு அவரது மகளை அந்தப் பெண் கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர், பக்கத்து வீட்டிற்கு சென்று அவர்களிடம் இருந்து கார் சாவியைப் பெற்றுக் கொண்டு வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலத்திற்கு சென்றுள்ளார். அந்த பாலத்தில் இருந்து ஜூவாரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அப்போது அந்தப் பாலத்தின் அருகே மற்றொரு பாலத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரை மீட்டனர். உடனடியாக கோவா மருத்துவக் கல்லூரிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பால் நிலா... ஹர்லின் தியோல்!

உலக அரங்கில் இந்திய சினிமா... ரன்வீர் சிங் பேச்சு!

தமிழ்நாட்டில் இதுவரை 6.07 கோடி படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

”RSS சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு வெளியே SIR-ஐ எதிர்த்து போராடும் Vijay" - Appavu

பாஜக - தவெக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் | TVK-BJP alliance

SCROLL FOR NEXT