ப.சிதம்பரம் (கோப்புப் படம்) 
இந்தியா

விலைவாசி உயர்வுக்கு விளக்கம் நிதியமைச்சர் அளிக்கவில்லை: ப.சிதம்பரம்

விலைவாசி உயர்வு குறித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

விலைவாசி உயர்வு குறித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ஆங்கில நாளேடு ஒன்றில் விலைவாசி உயர்வு பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் பதில் கூறவில்லை.

நிகழ்காலத்தைப் பற்றி பேசுவதை விட வரலாற்றை ஆய்வு செய்வதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிக அக்கறை காட்டுபவராக உள்ளார். 

பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு எடுக்கும் நடவடிக்கைகள குறித்தும் நாடாளுமன்ற உரையில் நிதி அமைச்சர் விளக்கம் அளிக்கவில்லை. விலையேற்றம் மந்திரத்தால் நிகழ்ந்தது என்றும், மந்திரம் போன்று இறங்கிவிடும் எனவும் மத்திய அரசு நினைக்கிறது என விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT