இந்தியா

முன்கூட்டியே முடிந்தது மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நான்கு நாள்களுக்கு முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நான்கு நாள்களுக்கு முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படவுள்ளதால், சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என எம்.பி.க்கள் அவையில் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

முதலில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மக்களவையும் தேதி குறிப்பிடாமல் முன்கூட்டியே ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

அதன்பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 33 மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இன்று மின்சார திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குடும்பநல பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கான மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும் சர்ச்சைக்குரிய எந்த சட்டமும் நிறைவேற்றாமல் இந்த கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் விபத்து: ஐயப்பப் பக்தா் உயிரிழப்பு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

புத்தொளி... ஸ்ரீலீலா!

சாலை பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT