கோப்புப் படம் 
இந்தியா

சென்னை ஐஐடியில் படித்த 80% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு!

இந்தாண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஐஐடி சென்னையில் படித்த மாணவர்களில் 1,199 பேருக்கு வேலை கிடைத்திருப்பதாக சென்னை ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

இந்தாண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஐஐடி சென்னையில் படித்த மாணவர்களில் 1,199 பேருக்கு வேலை கிடைத்திருப்பதாக சென்னை ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது. 

1959ஆம் ஆண்டு இந்திய அரசால் ஐஐடி சென்னை உருவாக்கப்பட்டது. 2021-2022 கேம்பஸ் பிளேஸ்மெண்டில் 80 சதவிகிதம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த வேலைவாய்ப்பில் 45 பணிகளுக்கான ஆணையை 14 சர்வதேச நிறுவனங்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 131 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 199 பணி நியமனங்களையும் வழங்கியுள்ளது. 61 எம்பிஏ மாணவர்களுக்கு இதில் வேலை வாய்ப்பு கிடைத்தது. 100 சதவிகிதம் எம்பிஏ மாணவர்களுக்கு இந்தாண்டு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாணவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூபாய் 21.48 லட்சம். இதில் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 250,000 டாலர் சம்பளத்துடன் வேலை வழங்கப்பட்டுள்ளது. 

ஐஐடி சென்னை வேலைவாய்ப்பு ஆலேசகர் சி.எஸ். ஷங்கர் ராம், “இந்தாண்டு மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தாண்டு வேலைவாய்ப்பு ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. ஐஐடி சென்னை சார்பாக தேர்வுசெய்த நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT