FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குடியரசு துணைத் தலைவர் பதவி கேட்டேனா? பாஜகவுக்கு நிதீஷ் குமார் பதில் 

பாஜக உடனான கூட்டணி முறிவுக்கு பொய்யான காரணங்களை அக்கட்சியினர் தெரிவித்து வருவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

6 பிப்ரவரி 2024, 6:18 pm IST
நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ்
பகிர்:

பாஜக உடனான கூட்டணி முறிவுக்கு பொய்யான காரணங்களை அக்கட்சியினர் தெரிவித்து வருவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பிகாரில் பாஜக உடனான கூட்டணியிலிருந்து வெளிவந்த நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளார். 

நிதீஷ் குமாரின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ள பாஜக அவர் உள்பட தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரை விமர்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி குடியரசு துணைத் தலைவர் பதவி வழங்காததாலேயே நிதீஷ் குமார் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் பாஜகவின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள நிதீஷ் குமார், “பாஜகவினர் தெரிவிப்பது நகைச்சுவையானது. எனக்கு அப்படி ஒரு கோரிக்கை இல்லை. குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நான் எந்தளவு ஆதரவு தெரிவித்திருந்தேன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக சுஷில் மோடி தெரிவித்த கருத்துகள் பொய்யானவை எனவும் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments