கோப்புப்படம் 
இந்தியா

ரக்‌ஷா பந்தன்: நாட்டு மக்களுக்கு மோடி வாழ்த்து

ரக்‌ஷா பந்தன் திருநாளையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN


ரக்‌ஷா பந்தன் திருநாளையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ரக்‌ஷா பந்தன் என்பது சகோதரிகள், தங்கள் சகோதரர்கள் மீதான அன்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்தும் நாளாகும். அவர்களுக்கிடையே உள்ள பிரிக்க முடியாத அன்பை வெளிப்படுத்துவதற்கும், தன்னிச்சையான பரஸ்பர அன்பையும், மக்களை நெருக்கமாக்கும் நாள். 

சகோதரத்துவத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ரக்‌ஷா பந்தன் சிறப்பு நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சகோதர, சகோதரிகளுக்கிடையே கொண்டாடப்படும் இந்த ரக்‌ஷா பந்தன் திருநாள், நமது சமூகத்தில், நல்லிணக்கத்தையும், மகளிர் மீதான மரியாதையையும் ஊக்குவிப்பதாக அமையட்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT