முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் மின்னல் தாக்கி 4 விவசாயிகள் பலி

ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

Updated On : 17 ஆகஸ்ட், 2022 at 3:02 PM
பகிர்:


ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

இச்சம்பவம் போகோல் கிராமத்தில் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் வயலில் உள்ள ஒரு கூடாரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். 

இவர்கள் காக்கிநாடா மாவட்டம் அன்னவரத்தில் இருந்து வேலைக்காக வந்திருந்தனர். 

Advertisement

காயமடைந்தவர்கள் உடனடியாக எலுருவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சிகிச்சைக்காக விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இறந்தவர்கள் கொண்டபாபு (35), ராஜு (28), தர்மராஜு (25), வேணு (19) என அடையாளம் காணப்பட்டனர். சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக எலுருவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கணேஷ், அர்ஜூன், புல்லையா காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.