முகப்பு
இந்தியா

தொடர்ந்து 2-வது நாளாக 60,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ்!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் 60,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தமாகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் 60,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தமாகிறது. 

ஆனால், நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தை இன்று இறக்கம் கண்டு வருகின்றன. நேற்று(புதன்கிழமை) 60,260.13 புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(வியாழக்கிழமை) 60,080.19 என்ற புள்ளிகளுடன் தொடங்கியது.

காலை 9.21 மணிக்கு 125 புள்ளிகள் குறைந்து 60,135.12 ஆக இருந்தது. அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 26.65 புள்ளிகள் குறைந்து 17,917.60 புள்ளிகளாக இருந்தது. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →