அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் 
இந்தியா

அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் (விடியோ)

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஆர்டிஓ வீட்டை சோதனை செய்யச் சென்ற பொருளாதார குற்றத் தடுப்பு நடவடிக்கைக் குழுவினருக்குத்தான் பெரிய சோதனையாக இருந்தது.

DIN

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஆர்டிஓ வீட்டை சோதனை செய்யச் சென்ற பொருளாதார குற்றத் தடுப்பு நடவடிக்கைக் குழுவினருக்குத்தான் பெரிய சோதனையாக இருந்தது.

ஆர்டிஓ வீடுதானே என்று அலட்சியமாக சென்றிருந்த அதிகாரிகளுக்கு, 6 சொகுசு பங்களா, 2 சொகுசு கார்கள், வீட்டுக்குள்ளேயே திரையரங்கு, பண்ணை வீடு, நீச்சல் குளத்துடன் 10000 சதுர அடியில் மாளிகைப் போன்ற வீடு, நகை, பணத்தை பறிமுதல் செய்தபோது சற்று மலைத்துத்தான் போயிருப்பார்கள்.

புதன்கிழமை இரவு, போபாலில் மண்டல போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) சந்தோஷ் பால் மற்றும் அவரது மனைவி கிளெர்க் ரேகா பால் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வந்த புகாரினையடுத்து பொருளாதார குற்றத் தடுப்பு அதிகாரிகள்  வீட்டுக்கு சோதனைக்குச் சென்றனர்.

அங்கிருந்து 16 லட்சம் ரொக்கப் பணம், இரண்டு சொகுசு கார்கள், விலை உயர்ந்த இருசக்கர வாகனம், ஏராளமான நகைகள், ஆவணங்கள் என பலவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையில், அவர்கள் தங்கள் வருமானத்தை விட 650 மடங்கு அதிகமாக சொத்துக் குவித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை வரை இந்த சோதனை நீடித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏலச் சீட்டு நடத்தி ரூ. 10 லட்சம் மோசடி

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில்! இந்தாண்டு இன்னும் ஸ்பெசல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அலைபாயும் கவிதை... பிரக்யா ஜெய்ஸ்வால்!

துள்ளும் நளினம்... கிருத்தி ஷெட்டி!

மீனவர்களுக்கு எச்சரிக்கை: காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது!

SCROLL FOR NEXT