முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் பேருந்து-கார் மோதல்: 5 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து முது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
கோப்புப்படம்
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து முது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தேசிய நெடுஞ்சாலை-30இல் உள்ள மெட்டாவாடா கிராமத்திற்கு அருகே அதிகாலை இந்த விபத்து நடைபெற்றதாக ஜக்தல்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் ஹேம்சாகர் சித்தார் தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

சுமார் 35 பேருடன் ராய்பூரில் இருந்து ஜகதல்பூருக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, எதிர்த் திசையில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்து 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

காரில் இருந்த மற்றுமொருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு  மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர்கள் ஜக்தல்பூரைச் சேர்ந்த தினேஷ் சேத்தியா, கௌதம் கெய்ன், சச்சின் சேத்தியா மற்றும் அபிஷேக் சேத்தியா மற்றும் சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த ஷாகிப் கான் என அடையாளம் காணப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.

சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநர் பின்னர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருவதாக சித்தார் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →