முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 13,272 பேருக்கு கரோனா; மேலும் 36 பேர் பலி

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 13,272 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 20 ஆகஸ்ட், 2022 at 10:40 AM
பகிர்:

நாட்டில் ஒரேநாளில் 13,272 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,272 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,01,166  ஆக உள்ளது. மேலும் 36 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,27,289 ஆக உள்ளது.

Advertisement

கரோனாவிலிருந்து மேலும் 13,900 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,36,99,435 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

நாட்டில் இதுவரை 209.40 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  ஒரே நாளில் நேற்று 13,15,536 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.