காரின் மீது மூவர்ண கொடியை ஒட்டியதற்காக தாக்கப்பட்ட வழக்கில் 2 நபர்கள் கைது
காரின் மீது மூவர்ண கொடியை ஒட்டியதற்காக கலை இயக்குநர் அர்கன் எஸ் கர்மா தாக்கப்பட்ட வழக்கில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரின் மீது மூவர்ண கொடியை ஒட்டியதற்காக கலை இயக்குநர் அர்கன் எஸ் கர்மா தாக்கப்பட்ட வழக்கில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள கலை இயக்குநர் அர்கன் எஸ் கர்மா தனது காரில் தேசிய மூவர்ண கொடியை ஒட்டியுள்ளார். இதற்கு எதிர்வினையாக ஆக.15 நள்ளிரவு ஒரு மணிக்கு 4 நபர்கள் பள்ளிமுக்கு தேசிய நெடுஞ்சாலை 64இல் அவரது காரை நிறுத்தி கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது இது குறித்து கேரள காவல்துறையினர் கூறியதாவது:
கலை இயக்குநர் தனது காரில் மூவர்ண கொடியை ஒட்டியதற்காக கொல்லம் மாவட்டத்தில் ஆக.15 அன்று தாக்கிய 2 நபர்களை கைது செய்துள்ளோம். முதன்மை குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது பாதிக்கப்பட்ட நபரின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்ட இன்னொரு நபர் இரண்டு முறை கன்னத்தில் அறைந்துள்ளார். பிறகு காரில் இருந்து வெளியே இழுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் கல்லை கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் அர்கன் எஸ் கர்மாவுக்கு தலை மற்றும் மூக்கில் ரத்தம் வடிந்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.