இந்தியா

யுபிஐ பரிவர்த்தனைக்குக் கட்டணமா? ஆர்பிஐ தரும் விளக்கம்

DIN

மும்பை: எண்ம (டிஜிட்டல்) முறையில், மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, இது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு சுட்டுரைப் பக்கத்தில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் விளக்கத்தில், யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் போது, எந்த விதமான கட்டணம் வசூலிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. இதுவரை அதுபோன்ற எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அதாவது, யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பொதுச் சேவை, பொதுமக்களின் வசதிக்காக, பொருளாதார மேம்பாட்டுக்காகக் கொண்டுவரப்பட்டது. அதற்கு கட்டணம் வசூலிப்பது என்ற எந்த பரிசீலனையும் மத்திய அரசிடம் இல்லை. அதே வேளையில், சேவை வழங்குபவர்களின் செலவினத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிகள் வேறு முறைகளில் கண்டடையவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஜனவரி 1ஆம் தேதி முதல் கட்டணமில்லா யுபிஐ பணப்பரிவர்த்தனை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அது முதல், பயனாளர்களுக்கும் வணிகர்களுக்கும் யுபிஐ பணப்பரிவர்த்தனை கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது.

முன்னதாக, ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட நடைமுறைகளைக் கொண்டு வருவது குறித்து கருத்துகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டது.

பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து மக்கள் தங்களது ஆலோசனைகள், உரிய கருத்துகளை 2022ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதிக்குள், மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, எண்ம முறையில் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து, தற்போது சிறிய நடைபாதைக் கடைகளில் கூட யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி வந்துவிட்டது. இந்த நிலையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் எண்ம பணப்பரிவர்த்தனை முறைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் ஆர்பிஐ இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

பணப்பரிவர்த்தனை முறைகளை ஒழுங்குபடுத்துவது, அதிலிருக்கும் குறைபாடுகளைப் போக்குவது, பணப்பரிவர்த்தனை முறையில் வருவாயைப் பெருக்குவது உள்ளிட்ட விஷயங்களிலும் ஆர்பிஐ கவனம் செலுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை முறையில் பல்வேறு இடைத்தரகர்கள் இருந்தாலும் கூட, இந்த பணப்பரிவர்த்தனை சங்கிலி தொடரில் பயனாளர்களின் புகார்கள் பெரும்பாலும் நேரடியான கட்டணங்கள் தொடர்பானதாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT