இந்தியா

நபிகள் நாயகம் குறித்து அவதூறு: பாஜக எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்

தெலங்கானாவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

DIN


தெலங்கானாவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் கோஷாமால் தொகுதியின் எம்எல்ஏவான ராஜா சிங், நபிகள் நாயகம் பற்றி அவதூறான கருத்தைத் தெரிவித்ததுடன், நபிகள் பற்றி தொலைக்காட்சி விவாதத்தில் பேசி சர்ச்சையான நூபுர் சர்மாவின் கருத்தை மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அவர் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, இஸ்லாமியர்கள் பலர் நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவில் ராஜா சிங்குக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக வழக்குப் பதியப்பட்டு இன்று காலை எம்எல்ஏ ராஜா சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ.வான ராஜா சிங்கை இடைநீக்கம் செய்த பாஜக தலைமை, 10 நாள்களில் விளக்கம் அளிக்குமாறு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ராஜா சிங்கிற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமாரையும் காவல்துறை கைது செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

என்ன பார்வை... சைத்ரா!

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

வியக்க வைக்கும் விஎஃப்எக்ஸ்... மிராய் டிரைலர்!

தில்லி பிரீமியர் லீக்: அறிமுகப் போட்டியில் அசத்திய ஆர்யவிர் சேவாக்!

SCROLL FOR NEXT