ஜெ.பி.நட்டா (கோப்புப் படம்) 
இந்தியா

பாஜக வளர்ச்சியால் சந்திரசேகர் ராவுக்கு கவலை: ஜெ.பி.நட்டா

தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக வளர்ச்சியடைந்திருப்பது முதல்வர் சந்திரசேகர் ராவை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். 

DIN


தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக வளர்ச்சியடைந்திருப்பது முதல்வர் சந்திரசேகர் ராவை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். 

தெலங்கானாவில் கோஷாமால் தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ராஜா சிங், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பேசியதாக விடியோ ஒன்றை பதிவிட்டார். 

இந்த விடியோவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நூபுர் சர்மாவின் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனை. இதனைத் தொடர்ந்து ராஜா சிங்கை காவல் துறையினர் கைது செய்தனர். 

காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

காவல் துறையினரின் அனுமதியை மீறி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில தலைவர் சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, சட்டவிரோதமாக பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் குமாரை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு கைது செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சிக்கு எதிராகவும், குடும்ப அரசியலுக்கு எதிராகவும் தெலங்கானா மக்கள் கிளர்ந்துள்ளனர். இதனால், பாஜகவுக்கு தெலங்கானாவின் மூலைமுடுக்குகளில் கூட ஆதரவு கிடைத்து வருகிறது. இதனால் சந்திரசேகர் ராவ் கவலை அடைந்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

SCROLL FOR NEXT