காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் ராஜிநாமா
இளம் காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இளம் காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஷெர்கில் தனது ராஜிநாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.
இந்தியத் தேசிய காங்கிரஸின் தற்போதைய முடிவெடுப்பவர்களின் சித்தாந்தமும் பார்வையும் இனி இளைஞர்கள் மற்றும் நவீன இந்தியாவின் எண்ணங்களுடன் ஒத்துபோவாததே முதன்மையான காரணம் என்று ஷெர்கில் தனது கடிதத்தில் கூறினார்.
Advertisement
மேலும், முடிவெடுப்பது இனி பொதுமக்கள் மற்றும் நாட்டின் நலனுக்கானது அல்ல என்று கூறுவது எனக்கு வேதனை அளிக்கிறது. இது தனிமனிதர்களின் சுயநலன்களால் பாதிக்கப்படுவதும், நிதர்சனத்தைத் தொடர்ந்து புறக்கணிப்பதும் ஆகும். எனவே, இதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது தொடர்ந்து பணியாற்றவோ முடியாது என்று அவர் கூறினார்.
தொழில் ரீதியாக ஷெர்கில் ஒரு வழக்குரைஞராகவும் இளம் காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவர்களின் ஒருவர். இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர் ஆவார்.
இவரின் ராஜிநாமா அவரது நம்பிக்கைக்குரிய கட்சித் தலைவர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.