இந்தியா

காதல் தோல்வி: ஒரே ஆண்டில் 70 கிலோ எடையைக் குறைத்த இளைஞர்

காதல் தோல்வியின் வலியிலிருந்து மீள தன் உடல் எடையை ஒரே ஆண்டில் 70 கிலோ வரை குறைத்துள்ள இளைஞர் ஒருவரின் விடியோ வைரலாகி வருகிறது.

DIN

காதல் தோல்வியின் வலியிலிருந்து மீள தன் உடல் எடையை ஒரே ஆண்டில் 70 கிலோ வரை குறைத்துள்ள இளைஞர் ஒருவரின் விடியோ வைரலாகி வருகிறது.

காதலில் தோற்றால் குடி, புகைப்பழக்கம், தனிமை என வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளமால், எந்த உடல் அமைப்பைக் காரணம் காட்டி காதலித்த பெண் விட்டுச் சென்றாரோ அதே உடலை ஒரே ஆண்டிற்குள் அடையாளமில்லால் மாற்றியிருக்கிறார் புவி என்கிற இளைஞர்.

கடந்த 2021 ஜனவரி மாதம் புவி உடல் எடையை பரிசோதித்த போது 144 கிலோவில் இருந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்தவர் இதே தேதி 2022 ஆம் ஆண்டில் உடல் எடையைப் பாதியாகக் குறைக்க முடிவெடுத்துள்ளார்.

அதன்பின், 12 மாதங்கள் கடுமையான டயட், உடற்பயிற்சி மூலம் 70 கிலோ வரை எடையைக் குறைத்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

புவி வெளியிட்ட எடைகுறைப்பு விடியோவில் பலரும் இது சிகிச்சை மூலம் மட்டுமே சாத்தியம் என கமெண்ட் அடித்தாலும், எந்த விதமான சிகிச்சையையும் எடைகுறைப்பு மருந்துகளையும் எடுத்துக்கொள்ளவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

தேனும் நஞ்சாகும்!

உள்ளாட்சியில் சீர்திருத்தங்கள்!

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு பிடிஆணை

SCROLL FOR NEXT