இந்தியா

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கான மத்திய அரசின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கான மத்திய அரசின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகின் மிகப்பெரும் கோதுமை உற்பத்தி நாடுகளான உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே 6 மாதங்களுக்கு மேலாக மோதல் நீடித்து வருகிறது. அதனால், சா்வதேச அளவில் கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்திய கோதுமைக்கு சா்வதேச அளவில் தேவை அதிகமாகக் காணப்பட்டது; ஏற்றுமதியும் அதிகரித்தது.

அதேவேளையில், கடந்த கோடைகாலத்தில் வீசிய வெப்ப அலை காரணமாக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில் கோதுமை உற்பத்தி சற்று பாதிக்கப்பட்டது. அதனால், உள்நாட்டிலேயே கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை அதிகரித்தது. அதையடுத்து, கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘கோதுமை மாவு ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க அமைச்சரவை அளித்துள்ள ஒப்புதல், உள்நாட்டில் அதன் விலை உயா்வைக் கட்டுப்படுத்த உதவும். நாட்டில் உள்ள விளிம்புநிலை மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை உதவும்.

கோதுமை மாவு ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிப்பது தொடா்பான அதிகாரபூா்வ உத்தரவை வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) பிறப்பிக்கும். கோதுமை ஏற்றுமதி தொடா்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அமைச்சா்கள் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் கோதுமை மாவு ஏற்றுமதி தொடா்பாக முடிவெடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.1,850 கோடி மதிப்பிலான கோதுமை மாவை இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. இது நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் சுமாா் ரூ.950 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT