கோப்புப்படம் 
இந்தியா

குறையும் கரோனா பாதிப்பு: நாட்டில் புதிதாக 9,520 பேருக்கு தொற்று; மேலும் 41 பேர் பலி

நாட்டில் ஒரேநாளில் 9,520 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 41 பேர் பலியாகியுள்ளனர். 

DIN

நாட்டில் ஒரேநாளில் 9,520 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 41 பேர் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,520 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 10,256 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 87,311 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.20 சதவீதமாக உள்ளது. 

மேலும், 41 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,27,597 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

கரோனாவிலிருந்து மேலும் 12,875 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,37,83,788 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.62 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 211.39 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 25,86,805 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளர்ந்த நிலா... மடோனா செபாஸ்டியன்!

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

SCROLL FOR NEXT