மிதாலி ராஜ் - ஜெ.பி.நட்டா 
இந்தியா

அரசியலில் களமிறங்குகிறாரா மிதாலி ராஜ்? பாஜக தலைவருடன் சந்திப்பு

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நேரில் சந்தித்து பேசினார். 

DIN

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நேரில் சந்தித்து பேசினார். 

பிசிசிஐ நிர்வாகத்தில் பொறுப்புக்காக காத்திருந்ததாக கூறப்படும் மிதாலி ராஜ், அந்த வாய்ப்பு கிடைக்காததால், அரசியலில் களமிறங்கவுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 

எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மிதாலி ராஜ், மரியாதை நிமித்தமாகவே ஜெ.பி.நட்டாவை சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்துள்ளார். 

தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதனால் தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தெலங்கானா மாநில பாஜக சார்பில் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்கு முக்கிய பிரபலங்களிடம் பாஜக தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். 

அந்தவகையில், மிதாலி ராஜ் - நட்டா சந்திப்பு பார்க்கப்படுகிறது. வாக்குகளை முன்வைத்து நடத்தப்படும் பாஜக தேர்தல் யாத்திரையில், பிரபலங்களின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது, பிசிசிஐ நிர்வாகத்தில் பொறுப்பேற்க விருப்பம் உள்ளதையும் சுட்டிக்காட்டினார். 

எனினும் தற்போதுவரை அது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இந்நிலையில், அரசியலில் களமிறங்கும் நோக்கத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை மிதாலி ராஜ் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. 

எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மிதாலி ராஜ், மரியாதை நிமித்தமாகவே ஜெ.பி.நட்டாவை சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X தளத்தில் Comment Off “கருத்து சுதந்திரம் பற்றி திருமா பேசுகிறார்!” அண்ணாமலை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT