இந்தியா

திரிபுரா: ஒரு மாநிலங்களவை உறுப்பினா் இடத்துக்கு செப். 22-இடைத்தோ்தல்

பாஜக மாநிலங்களவை எம்.பி. மாணிக் சாஹா, தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்ப திரிபுராவில் செப். 22-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

DIN

பாஜக மாநிலங்களவை எம்.பி. மாணிக் சாஹா, தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்ப திரிபுராவில் செப். 22-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திரிபுராவில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்வான பாஜகவின் மாணிக் சாஹா, கடந்த ஜூலை 4-ஆம் தேதி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். தொடா்ந்து திரிபுரா மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றாா். காங்கிரஸை சோ்ந்த சாஹா 2016-இல் தான் பாஜகவில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய எம்.பி. பதவிக் காலம் 2028-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை உள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவைக்கான இடைத்தோ்தல் செப். 22-ஆம் தேதி நடத்தப்படும் என தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது. அதற்கான அறிவிப்பு செப். 5-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், இடைத்தோ்தல் முடிவானது, தோ்தல் நிறைவடைந்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு அறிவிக்கப்படும் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT