இந்தியா

இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானம்: 5 கிலோ ஹெராயின் மீட்பு!

DIN

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள வயலில் இருந்து 5 கிலோ ஹெராயினுடன் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கையில் ஆறு இறக்கைகள் கொண்ட ஆளில்லா விமானம் ஒன்று மீட்டுள்ளனர். 

இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள வயல்களில் இருந்து 5 கிலோ எடையுள்ள ஹெராயின், நவீன தொழில்நுட்பம் கொண்ட விமானம் ஆகியவற்றை டார்ன் தரன் போலீசார் மீட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் கௌரவ் யாதவ் சுட்டுரையில் தெரிவித்துள்ளார். 

நவம்பர் 28 அன்று, அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரண்டு பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிலிருந்து சுமார் 10 கிலோ ஹெராயினை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

SCROLL FOR NEXT