மகாராஷ்டிர மாநிலத்தின் ஷிவ்னி வனப்பகுதியில் இறந்த நிலையில் நான்கு புலிக் குட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், சந்திராபூர் மாவட்டத்தில் தடோபா-அந்தாரி புலிகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள ஷிவ்னி வனப்பகுதியில் இன்று காலை 4 புலிக் குட்டிகள் இறந்து கிடந்ததாக வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், நவம்பர் 30 ஆம் தேதி புலி (டி-75) இறந்து கிடந்த இடத்திற்கு அருகே உள்ள இடத்தில் சடலங்கள் காணப்பட்டன. குட்டிகளில் காயங்கள் காணப்பட்டன, அவை புலியால் கொல்லப்பட்டதைக் குறிக்கிறது. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்படும்.
இதையும் படிக்க- உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுகளின் அட்டவணை
குட்டிகள் மற்றும் இறந்த புலியின் திசு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு தாயின் அடையாளம் கண்டறியப்படும். கண்காணிப்பு கேமரா உதவியுடன் மற்ற புலிகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.