இந்தியா

ஐந்து நாள்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

ENS

மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் ஐந்து நாள்களுக்கு முன் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சிறுவன் பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

சிறுவனை மீட்கும் பணிகள் 5 நாள்களாக நடைபெற்று வந்த நிலையில், சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து, சனிக்கிழமை காலை 5 மணியளவில், அவரது உடல் மட்டுமே மீட்கப்பட்டது.

மீட்புக் குழுவினருடன் சிறுவன் பேசி வந்த நிலையில், வெள்ளிக்கிழமைக்குப் பிறகு சிறுவனிடமிருந்து எந்த சப்தமும் வராததால், அவன் உயிரிழந்ததை மீட்புப் படையினர் அறிந்து கொண்டு, தீவிரமாக செயல்பட்டு உடலை மீட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தனது வீட்டினருகே உள்ள வயலில் சிறுவன் தன்மயி விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, சமீபத்தில் தோண்டப்பட்டு மூடப்படாமல் வைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தன்மயி தவறி விழுந்தாா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினா் விரைந்தனா். தன்மயி 35 அடி முதல் 45 அடிக்குள்ளாக சிக்கியிருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னா், மண்அள்ளும் பொக்லைன் இயந்திரத்தின் துணை கொண்டு 25 அடி வரை குழி தோண்டப்பட்டது.

சிறுவனை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தது. காவல் துறை, மாவட்ட நிா்வாகம் உறுதுணையோடு மீட்புப் படையினா் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வவந்தனர். ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் குழிதோண்டி சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தான். இன்று காலை சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT