முகப்பு
இந்தியா

கோதாவரி - காவிரி நதி நீர்: கட்டளை அணையுடன் இணைக்கும் தமிழக கோரிக்கை ஏற்பு

கோதாவரி- காவிரி நதி நீா் இணைப்பை விரைவாக மேற்கொள்ளவும், தமிழகத்தில் இந்த இணைப்பு கால்வாயை காவிரியில் கிராண்ட் அணைக்கட்டில் இணைப்பதற்குப் பதிலாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

கோதாவரி- காவிரி நதி நீர் இணைப்பை விரைவாக மேற்கொள்ளவும், தமிழகத்தில் இந்த இணைப்பு கால்வாயை காவிரியில் கல்லணையில் இணைப்பதற்குப் பதிலாக கட்டளை அணையில் இணைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.
 தேசிய நீர் மேம்பாட்டு முகமை அமைப்பின் 36-ஆவது ஆண்டுக் கூட்டமும், நதிநீர் இணைப்புக்கான சிறப்புக் குழுவின் 20 -ஆவது கூட்டமும் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் தில்லி விஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 இதில், சுமார் ரூ.60 ஆயிரம் கோடி செலவில் கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புக்கான முதல்கட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய ஜல் சக்தித் துறையின் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் (என்.டபிள்யூ.டி.ஏ.) தயாரித்துள்ளது. இந்தத் திட்டத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் சில யோசனைகளை முன்வைத்தார்.
 அவர் குறிப்பிடுகையில், "கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும். இந்தக் கால்வாயை கல்லணைக்குப் பதிலாக காவிரியில் கட்டளை அணையில் இணைக்க வேண்டும்' என தெரிவித்தார். இதற்கு மத்திய அமைச்சர் ஷெகாவத் இசைவு தெரிவித்துள்ளார்.
 கட்டளை அணை: கட்டளை அணை கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ளது. கோதாவரி இணைப்புக் கால்வாயை கல்லணையில் சேர்ப்பதற்குப் பதிலாக கட்டளை அணையில் சேர்ப்பதன் மூலம் நீரை சிறப்பாகப் பயன்படுத்தி உபயோகத்தை அதிகரிக்க முடிவும் எனக் கருதி தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தக் கால்வாயை கோதாவரி- கிருஷ்ணா- பெண்ணாறு ஆகியவற்றின் மூலம் ஆரணி வழியாக கொண்டு செல்ல தமிழக அரசு சார்பில் இந்தக் கூட்டத்தில் கோரப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.