உ.பி.,யில் பள்ளி பேருந்து கவிழ்ந்தது: 12 மாணவர்கள் காயம்!
உத்தரப் பிரதேசத்தில் பள்ளிப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில், 12-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் பள்ளிப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில், 12-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது. பிசௌலி நகரில் உள்ள தனியார்ப் பள்ளி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் வர்மா கூறுகையில்,
பள்ளி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 12 மாணவர்கள் காயமடைந்தனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த பொதுமக்கள் மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.