முகப்பு
இந்தியா

சண்டீகருக்குள் தனியார்  பேருந்துகள் நுழையத் தடை 

பஞ்சாப் மாநிலம் சண்டீகருக்குள், அரசுப் பேருந்துகள் மட்டுமே நுழைய வேண்டும் என்றும், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது என்றும், முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
சண்டீகருக்குள் தனியார்  பேருந்துகள் நுழையத் தடை 
பகிர்:

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சண்டீகருக்குள், அரசுப் பேருந்துகள் மட்டுமே நுழைய வேண்டும் என்றும், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது என்றும், முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம், பஞ்சாப் மாநிலத்தில் பாதல் குடும்பத்துக்குச் சொந்தமான தனியார் பேருந்து நிறுவனம் மற்றும் ரௌடிகளால் நடத்தப்படும் பேருந்து நிறுவனத்தின் பேருந்துகளின் ஏகபோக உரிமைகள் குறைக்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு கருதுகிறது.

பஞ்சாப் மாநில அமைச்சர் லால்ஜித் சிங் தெரிவிக்கையில், பஞ்சாப் போக்குவரத்துத் திட்டம்  - 2018 என்பது, முந்தைய காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டது, பாதல் குடும்பம் மற்றும் ஒரு ரௌடி கும்பலின் பேருந்து நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் வால்வோ பேருந்துகள் சண்டீகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதால், அரசுப் பணம் அதிகளவில் நஷ்டமடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.