இந்தியா

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

DIN

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மொத்த ஆன்லைன் வருவாய் கட்டணம் விதிக்கப்படுவதால் பல நாடுகள் பயனடைவதாக லக்‌ஷ்மிகுமரம் மற்றும் ஸ்ரீதரன் சட்டநிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு அவர்களது லாபத்தில் வரி விதித்து வந்தது. அந்த நாடுகள் தற்போது மொத்த ஆன்லைன் வருவாய் கட்டண முறைக்கு மாற முடிவு செய்துள்ளன. இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தற்போது 18 சதவிகித ஜிஎஸ்டி செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,200 கோடி வருமானம் கிடைக்கிறது.

உலகின் பல நாடுகளும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மீது இந்த மொத்த வருவாய் கட்டணத்தை விதித்து வருகின்றனர். இதில், சட்டப்படி பதிவு செய்யப்படாத பல ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களும் உள்ளன. இது போன்ற பதிவு செய்யப்படாத ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை கண்டறிய ஜிஎஸ்டி கவுன்சில் குழு ஒன்றினை அமைத்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

சாதாரண விளையாட்டாக இருந்தாலும், திறன் சார்ந்த விளையாட்டாக இருந்தாலும் இந்த இரண்டு விதமான விளையாட்டுகளுக்கும் ஜிஎஸ்டி வரியினை 28 சதவிகிதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT