இந்தியா

ராமஜென்ம பூமியில் நடனமாடிய 4 பெண் காவலர்கள்! பணியிடை நீக்கம் (விடியோ)

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் காவலர்கள் நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர்கள் பணியிடை நீக்கம்

DIN


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் காவலர்கள் நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் நடனமாடும்போது சீருடை அணிந்திருக்கவில்லை, எனினும் அவர்கள் மீது காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமியில், ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின்போது பாதுகாப்பு வழங்குவதற்காக 4 பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். 

அவர்கள் தங்கள் கூடாரத்தில், வானொலியில் ஒலிபரப்பான போஜ்புரி பாடலுக்கு நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். இந்த விடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து 4 பெண் காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மாநில சிறப்பு காவல் கண்காணிப்பாளர், பெண் காவலர்கள் 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT