இந்தியா

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு!

DIN

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் பிகாரில் இது மிகவும் சோகமான சம்பவமாகப் பார்க்கப்படுகிறது. 

பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் கடந்த திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில் படிப்படியாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 65 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக பிகாரில் கடந்த 2016ல் மது அருந்த, விற்பனை செய்ய நிதீஷ் குமார் அரசு தடை விதித்தது. இதன்பின்னர் கள்ளச்சாராயம் குடித்து பலியாவது அங்கு தொடர்கதையாக உள்ளது. எனினும் தற்போதைய சம்பவம் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது. 

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பது தொடர்ந்து நடந்தாலும் தற்போது உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கு கண்டிப்பாக இழப்பீடு வழங்கப்படமாட்டாது என்றும் கள்ளச்சாராயம் குடித்தால் உயிரிழக்கதான் நேரிடும் என்றும் நிதீஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT