இந்தியா

கர்நாடகவுடனான எல்லைப் பிரச்னையில் அரசியல் வேண்டாம்: மகாராஷ்டிர முதல்வர்

கர்நாடகவுடனான எல்லைப் பிரச்னையில் எந்த அரசியலும் செய்ய வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

DIN

கர்நாடகவுடனான எல்லைப் பிரச்னையில் எந்த அரசியலும் செய்ய வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அம்மாநில சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகம் இடையேயான மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்னையில் முதல்முறையாக மத்திய உள்துறை அமைச்சர் மத்தியஸ்தம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் இப்போது அரசியல் வேண்டாம். எல்லையில் வசிப்பவர்களுடன் இணைந்து நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

முன்னதாக, இவ்விவகாரம் குறித்து இருமாநில முதல்வர்களும் அண்மையில் தொலைபேசியில் விவாதித்துள்ளார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ட்விட்டர் பதிவில், "மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்னுடன் தொலைபேசியில் பேசினார், இரு மாநிலங்களிலும் அமைதி மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கா்நாடகம் - மகாராஷ்டிரம் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. குறிப்பாக மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட 1956ஆம் ஆண்டுக்கு பிறகு இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்தது.கா்நாடகத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேசும் மக்கள் வாழும் 814 கிராமங்கள் உள்ளன. 

இந்தக் கிராமங்களை மகாராஷ்டிர மாநிலத்தோடு சோ்க்குமாறு அம்மாநில அரசும், அரசியல் கட்சிகளும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததைத் தொடா்ந்து இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்பட்ட பேருந்துகள் தாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT