முகப்பு
இந்தியா

முன்னதாகவே முடிகிறது குளிர்காலக் கூட்டத்தொடர்!

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், முதலில் திட்டமிடப்பட்டதை விட ஒரு வாரம் முன்னதாக, டிசம்பர் 23-ஆம் தேதி முடிவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
கோப்புப்படம்
பகிர்:

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், முதலில் திட்டமிடப்பட்டதை விட ஒரு வாரம் முன்னதாக, டிசம்பர் 23-ஆம் தேதி முடிவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை டிசம்பர் 23-ஆம் தேதி முடிக்க மக்களவையின் வணிக ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 29 வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதால், கூட்டத்தை முன்னதாகவே முடிக்க வேண்டும் என்று மக்களவைச் தலைவர் ஓம் பிர்லாவிடம் எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 23 ஆம் தேதி முடிவடையும் என்று தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →