கோப்புப் படம் 
இந்தியா

இந்தியாவில் 4 பேருக்கு, சீனாவில் பரவும் புதிய வகை கரோனா!

சீனாவில் பரவி வரும் ஒமைக்ரான் திரிபு வகை கரோனா இந்தியாவில் 4 பேருக்கு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

DIN

சீனாவில் பரவி வரும் ஒமைக்ரான் திரிபு வகை கரோனா இந்தியாவில் 4 பேருக்கு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

குஜராத்தில் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற இரண்டு திரிபு வகை கரோனா இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் - நவம்பர் மாதங்களில் கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேபோன்று ஒடிசாவிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் திரிபு வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் கரோனா கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படவில்லை. 

இதனிடையே குஜராத்தில் ஒமைக்ரான் திரிபு வகை கண்டறியப்பட்ட இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். முதல் நபருக்கு ஜூலை மாதத்தில் தொற்று கண்டறியப்பட்டது. 

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு மாதிரிகளை மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்ப மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச விமானங்களில் முகக்கவசம் அணியவும் மத்திய அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT