காஸியாபாத்தில் திருமண மண்டபத்தில் தீ விபத்து
காஸியாபாத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
காஸியாபாத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், காஸியாபாத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து நிகழ்ந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க- 2 ஆண்டுகளாக இருக்கும் பிஎஃப்.7 திரிபை திடீரென பூதாகரமாக்குவது ஏன்?
Advertisement
Advertisement
சம்பவ இடத்துக்கு ஆறு தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ராகுல் குமார் தெரிவித்ததாவது "ஒரு திருமண மண்டபத்தில் தீ விபத்து குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது.
ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த. தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீயில் ஏராளமான பொருட்கள் எரிந்துள்ளன," என்று கூறினார்.