நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் என யார் வேண்டுமானாலும் நடைப்பயணத்தில் பங்கேற்கலாம்: ஜெய்ராம் ரமேஷ்
நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் என யார் வேண்டுமானாலும் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்கலாம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் என யார் வேண்டுமானாலும் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்கலாம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் 108 ஆவது நாளாக ஹரியாணாவில் இருந்து இன்று தில்லிக்குள் நுழைந்தது.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து இன்று தலைநகர் தில்லிக்குள் நுழைந்ததையடுத்து காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க | 'அமெரிக்காவில் ஹிந்தி உதவாது; ஆங்கிலக் கல்வியை பாஜக பறிக்கிறது' - ராகுல் குற்றச்சாட்டு
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், 'ஒற்றுமை நடைப்பயணத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு என இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் வெறுப்பைத் தவிர்த்து நடைப்பயணத்தில் பங்கேற்றால் வரவேற்போம்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பல முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்துகொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ராகுலின் நடைப்பயணம் தில்லிக்குள் நுழைந்தது! திரளானோர் பங்கேற்பு!!