அனைவரிடத்திலும் அன்பு காட்ட கிறிஸ்துமஸ் ஊக்குவிக்கிறது: குடியரசுத் தலைவர் வாழ்த்து
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினம் அனைவரிடத்திலும் அன்பு மற்றும் கருணையை செலுத்த ஊக்கமளிக்கும் விழாவாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த கிறிஸ்துமஸ் திருநாள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நல்ல நாளில் இயேசு கிறிஸ்து அவரின் கருணையையும், அவரது தியாகத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துமஸ் திருநாள் அனைவரிடத்திலும் அன்பு மற்றும் பரிவு ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் விதமாக அமைகிறது. நாம் இயேசு கிறிஸ்துவின் நல்ல சிந்தனைகளை பின்பற்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நான் எனது இதயப்பூர்வமான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.