இந்தியா

பிகாரில் தினமும் 50ஆயிரம் கரோனா பரிசோதனைகள்: முதல்வர் நிதீஷ்குமார்

DIN

பிகாரில் தினமும் 50ஆயிரம் வரை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் கரோனா பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்குகிறோம். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 45,000-50,000 சோதனைகள் நடத்தப்படுகின்றன.

பிகார் விழிப்புடன் உள்ளது. நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் மத்திய அரசு அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், உயிா் காக்கும் கருவிகளின் இருப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது. 

மேலும் எந்த சவாலையும் எதிா்கொள்ளும் தயாா்நிலையுடன் மாநிலங்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT