சீனாவிலிருந்து பெங்களூரு திரும்பிய 12 பேருக்கு கரோனா!
பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் சீனாவில் இருந்து வந்த 12 பயணிகளுக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் சீனாவில் இருந்து வந்த 12 பயணிகளுக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து வந்த 37 வயது நபர் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 11 பயணிகள் அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களில் நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் திங்கள் மாலை அல்லது செவ்வாய்க்கிழமை காலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் இருந்து வந்த 37 வயது நபர் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்தவர் ஆவர்.
கடந்த மூன்று நாள்களில் விமான நிலையத்திற்கு வந்த 12 பேரும் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பொது மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.