கோப்புப் படம் 
இந்தியா

தேயிலைத் தோட்டத்தில் கையெறி குண்டுகள், வெடிமருந்துகள்!

அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

DIN

திப்ருகார்: அசாமில் தேயிலைத் தோட்டத்திலிருந்து கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

அசாம் மாநிலம் திருப்ருகர் மாவட்டத்திலுள்ள தெற்கு ஜலான் தேயிலை தோட்டத்தில் இருந்து இரண்டு சீன கைக்குண்டுகள், ஏகே ரக துப்பாக்கிகள் அடங்கிய இரண்டு நாளேடுகள், 12 தோட்டாக்கள் மற்றும் ஒரு பிஸ்டல் சைலன்சர் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் தோட்டத் தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்டது என்றார் திப்ருகார்க் காவல் கண்காணிப்பாளர் ஸ்வேதாங்க் மிஸ்ரா.

இந்த வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவை என்பதை கண்டறிய முயற்சித்து எடுத்து வருகிறோம் எனக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து நாங்கள் சிலரை விசாரித்து உள்ளோம், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT