முகப்பு
இந்தியா

சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் சிக்கி 8 பேர் பலி! தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:13 AM
பகிர்:

ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திர மாநிலம் பாமூரு பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சாலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாகக் குவிந்தனர். இதில் நெரிசலில் சிக்கி சிலர் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்தனர். 

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திரபாபு நாயுடு நேரில் சென்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →