இந்தியா

இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 226 ஆகப் பதிவு! 

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 226 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 226 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 5,30,702 ஆக உயர்ந்துள்ளது. 
அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,539 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் குணமடைந்த நிலையில், கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,44,029 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,87,983 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், இதுவரை 220.10 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT