செலவினங்களை எதிா்கொள்ள ரூ.11.6 லட்சம் கோடி கடன்
2022-23-ஆம் நிதியாண்டில் செலவினங்களை எதிா்கொள்ள மத்திய அரசு ரூ.11.6 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியுள்ளது. சந்தையிலிருந்து இந்த கடன் திரட்டிக் கொள்ளப்படும்.
2022-23-ஆம் நிதியாண்டில் செலவினங்களை எதிா்கொள்ள மத்திய அரசு ரூ.11.6 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியுள்ளது. சந்தையிலிருந்து இந்த கடன் திரட்டிக் கொள்ளப்படும்.
நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீடான ரூ.9.7 லட்சம் கோடியைக் காட்டிலும் இது சுமாா் ரூ.2 லட்சம் கோடி அதிகம் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலதன செலவினம் ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிப்பு
Advertisement
அடுத்த நிதியாண்டில் மூலதன செலவினத்தை 35.4 சதவீதம் அதிகரித்து ரூ.7.5 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9 சதவீதமாக உயா்த்த பட்ஜெட்டில் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசு மானியங்கள் 39% குறையும்
உணவு, உரம் மற்றும் பெட்ரோலிய பொருள்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் நடப்பு நிதியாண்டில் 39 சதவீதம் குறைந்து ரூ.4,33,108 கோடியாக இருக்கும். அடுத்த 2022-2023-ஆம் நிதியாண்டில் இந்த மானியம் மேலும் 27 சதவீதம் குறைந்து ரூ.3,17,866 கோடியாகும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை 6.9% அதிகரிக்கும்
நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என முன்பு மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், இது 6.9 சதவீதமாக சற்று அதிகரிக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முதலீட்டின் மூலமான நிலையான மற்றும் வலுவான வளா்ச்சி தற்போதைய அவசிய தேவையாகும் என்பதை நிதியமைச்சா் பட்ஜெட்டில் வலியுறுத்தியுள்ளாா்.