இந்தியா

'வெங்காயம், தக்காளி விலையைக் குறைக்க மோடி பிரதமராகவில்லை': பாஜக அமைச்சர்

DIN

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு விலையைக் குறைக்க பிரதமர் நரேந்திர மோடி பிரதமராகவில்லை என்று பாஜக தலைவரும், எம்.பி.யுமான கபில் பாட்டீல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய எம்.பி. கபில் பாட்டீல், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் சட்டம் இயற்றினார். 

காஷ்மீர் நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அவர்களது உடைமையாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒருநாள் இந்தியா வசமாகும்.

இது காங்கிரஸின் வேலை. ஆனால் இதனை நாங்கள் (பாஜக) இப்போது செய்து வருகிறோம். 2024ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும். அதனை நரேந்திர மோடி செய்து முடிப்பார். 

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு விலையை குறைக்க வேண்டும் என்ற மனநிலையிலிருந்து வெளியே வரவேண்டும். அதற்காக பிரதமராகவில்லை நரேந்திர மோடி என்று கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT