இந்தியா

பட்ஜெட் எதிரொலி: 59 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்

DIN

பட்ஜெட் எதிரொலியால் பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 527 புள்ளிகளும் நிஃப்டி 151 புள்ளிகளும் உயர்வுடன் காணப்பட்டன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 536.51 புள்ளிகள் உயர்ந்து 59,193.05 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.92 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 161.35 புள்ளிகள் உயர்ந்து 17,738.20 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.92 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் 27 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக பஜாஜ் பின்சர்வ் 3.08 சதவிகிதமும், இந்துஸ்இண்ட் வங்கி 2.92 சதவிகிதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் 2.64 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 2.28 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT