இந்தியா

நாட்டில் புதிதாக 1.61 லட்சம் பேருக்கு கரோனா; 1,733 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.61 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 1,733 பேர் உயிரிழந்தனர்.

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.61 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 1,733 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை புதன்கிழமை இன்று (பிப்.2) வெளியிட்டது.

அதில், புதிதாக 1,61,386 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,21,603-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,733 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,97,975-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 2,81,109 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,95,11,307-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலிருந்து குணமடைவோர் விகிதம் 94.60 சதவிகிதமாக உள்ளது. இதேபோன்று கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 9.26 சதவிகிதமாக உள்ளது.

ஐசிஎம்ஆர் அளித்த தகவலின்படி செவ்வாய்க்கிழமை மட்டும் 17,42,793 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை 73,24,39,986-ஆக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்கொரியா வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்!

மருந்து முறைகேடு வழக்கில் மேலும் சிலரைத் தேடும் காவல்துறை

3-வது முறையாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா; இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!

பிகார் முதல்வர் பதவி அவர்களின் மகன்களுக்கு அல்ல! - லாலு, சோனியாவை சீண்டிய அமித் ஷா

சூடானில் 460 பேரைக் கொன்ற துணை ராணுவப் படை!

SCROLL FOR NEXT