இந்தியா

இதுவரை கரோனா பாதிக்காதவர்களே இலக்கு: எய்ம்ஸ் பேராசிரியர்

IANS

புது தில்லி : கரோனா தடுப்பூசியும் ஏற்கனவே கரோனா உறுதி செய்யப்பட்டதும், கரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றலைக் கொடுத்துவிடும். ஆனால், இதுவரை  கரோனா பாதிக்காதவர்கள் தான் மிகவும் அபாயகட்டத்தில் இருப்பவர்கள், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதுதான் தற்போதைக்கு மிகவும் முக்கியம் என்று எய்ம்ஸ் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் புதிது புதிதாக கரோனா வைரஸ்கள் உருமாறி வேகமாகப் பரவியும் வருகின்றன. அதேவேகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடந்து வருவதால், கரோனா வேகமாகப் பரவினாலும், அதன் தீவிரம் தணிந்து வருகிறது. இதரக் கட்டுப்பாடுகளும் அதற்கு பேருதவி செய்கின்றன.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிதான், மிகப்பெரிய கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக உள்ளது. அதே வேளையில், ஏற்கனவே கரோனா பாதிப்பு உறுதி செய்ததும், இயற்கையாகவே தடுப்பு அரணாக மாறிவிடும் தடுப்பூசி செலுத்துவது போல.

இந்த நிலையில், புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் சஞ்சய் குமார் ராய் இது பற்றி கூறுகையில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசியும், ஏற்கனவே கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இயற்கையாகவே தடுப்பாற்றல் கிடைத்துவிடும். ஆனால், இதுவரை கரோனா பாதிக்காதவர்களே அதிக அபாயத்துக்குள்ளானவர்கள். எனவே, அவர்களுக்குத்தான் முக்கியமாக கரோனா தடுப்பூசி செலுத்தியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில், அமெரிக்க, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் நடத்திய ஆய்விலும், கரோனா தொற்று பாதிப்பும் கூட, உடலுக்கு மிக இயற்கையாகவும், மிக நீண்ட காலத்துக்கும் நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுப்பது தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோலவே, ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது, அவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

இது குறித்து ராய் கூறுகையில், தடுப்பூசியும், பாதிப்பும் நோய் எதிர்ப்பாற்றலைத் தடுகின்றன. பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இயற்கையாகவே நீண்ட காலத்துக்கு எதிர்ப்பாற்றல் இருக்கிறது.

எனவே, கரோனா பரவல் காலத்தில், தற்போதைக்கு கரோனா பாதித்தவர்களே ஓரளவுக்கு பாதுகாப்பானவர்கள். எனவே, கரோனா பாதிக்காதவர்களே அதிக அபாயத்துக்குள்ளானவர்கள். எனவே, அவர்களே கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், நோய் தீவிரமடைவதும், மரணத்தை 80 - 90 சதவீதம் குறைக்கவும் உதவுகிறது. உலகம் முழுவதும் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் குறைந்தபட்சம் 1 தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT