இந்தியா

லதா மங்கேஷ்கர் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி இரங்கல்

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

DIN


பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஜனவரி 8-ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் (92) இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதிஷ் கட்கரி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

"இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் மறைந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. 8 தசாப்த திரை வாழ்க்கையில், பல்வேறு மொழிகளில் தனது மெல்லிய குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தை அவர் தொட்டிருக்கிறார்.

அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது இரங்கல்."

ராகுல் காந்தி:

"இந்தியாவின் மிகவும் பிடித்த குரலாக பல தசாப்தங்களுக்கு லதா மங்கேஷ்கர் இருந்துள்ளார். அவரது பொன்னான குரல் என்றும் அழியாது. அவரது ரசிகர்களின் இதயத்தில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும்.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT